தங்கையின் உடலில் மாதவிடாய் ரத்தக்கறை! தவறாக நினைத்த அண்ணன் செய்த கொடூரச் செயல்!!

இந்தியாவில் தங்கையின் உடலில் ரத்தக்கரை இருந்ததை தவறாக நினைத்த அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பை உல்லாஸ் நகரை சேர்ந்தவர் சுமித், திருமணமானவர். மனைவி மற்றும் 12 வயது தங்கையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று தங்கையின் ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது, இதுபற்றி அவளிடம் கேட்க விவரம் ஏதும் தெரியவில்லை.

வாயில் துணிவைத்து அடைத்து உடல் முழுவதும் தீயால் சூடுவைத்துள்ளார், எனினும் வலியால் சிறுமி துடிதுடிக்க அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

முதன்முறையாக மாதவிடாய் வந்துள்ளது, இதை தவறாக நினைத்த சுமித் யாரோ ஒருவருடன் தவறான உறவு இருந்ததாக நினைத்து சித்ரவதை செய்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தும், பலன் ஏதுமின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாதவிடாய் ஏற்பட்டதாலே சிறுமியின் ஆடையில் ரத்தக்கறை இருந்ததும், இதுபற்றி ஏதும் தெரியாததால் சிறுமிக்கு விளக்கம் சொல்ல தெரியவில்லை என தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகப்பட்ட அண்ணன் தங்கை அடித்து கொடுமைப்படுத்தியும், அதில் சிறுமி உயிரிழந்ததும் உறுதியாகியுள்ளது.

இச்சம்பவத்துக்கு சிறுமியின் அண்ணிக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.