அச்சுறுத்தி வரும் மூன்று வகையான காய்ச்சல்கள், நாடு முழுவதும் பரவல்.

தற்போது நாடு முழுவதும் மூன்று வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு, இன்புளுவென்சா மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும் அவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தலைவலி, வாந்தி, உடல்வலி, சோர்வு போன்ற அறிகுறிகள் மூன்று வகையான காய்ச்சலிலும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை இந்த மூன்று வகையான காய்ச்சலிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது.

மேலும் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 2000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.