பொது வெளியில் வாய்ப்பு கேட்ட உச்ச நடிகை துளியும் மதிக்காத இயக்குனர்.

தமிழ் திரை உலகின் 20 ஆண்டுகளாக நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நான்கு படங்கள் நடித்திருக்கும் இவர் இதுவரை உலக நாயகனுடன் ஜோடி சேர்ந்தது இல்லை.


அண்மையில் இடம் பெற்ற தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு கடந்த பத்து வருடங்களாக சிறப்பு நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக விருதினை பெற்றிருந்தார் நயன்தாரா. அவருக்கான விருதினை வழங்கியிருந்தார் இயக்குனர் மணிரத்தினம். விருதைப் பெற்றுக் கொண்ட நயன்தாரா மணிரத்தினத்தின் கைகளால் விருது வாங்கிய தருணம் பெறுமதி ஆனது என்றும் அவருடைய படத்தில் பணியாற்ற விரும்புவதாகவும் வெளிப்படையாகவே கேட்டு இருந்தார்.

உலக நாயகனின் அடுத்த படத்தை மன்றத்தினம் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான கதாநாயகி தெரிவுகள் இடம் பெற்று வரும் நிலையில் திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. நயன்தாராவின் இந்த வேண்டுகோளை அடுத்து அவர்தான் அந்த திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தகவல்களின்படி பாலிவுட் நடிகையான வித்யா பாலன் உலக நாயகனுடன் ஜோடி சேர போவதாக தகவல் வழியாக உள்ளது.

இதனால் வெளிப்படையாகவே வாய்ப்பு கேட்டும் அதனை நிராகரித்தார் மனிரத்தினம். கடந்த இரு தசாப்தங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் சரிவை சந்தித்தது என்று எடுத்துக் கொள்ள முடிகிறது.