களுத்துறை யுவதி அகால மரணம் – தனியார் ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

களுத்துறையில் இடம்பெற்ற மாணவியின் மரணம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு ஒழுங்கற்ற மற்றும் பொறுப்பற்ற விதத்தில் நடத்தப்படும் ஹோட்டல்களும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை, அகில இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் பின்னர், நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் முகக் கவசம் அணிந்துள்ளதாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அகில இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

“ஆகவே, முகக் கவசம் அணிந்து வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரதும் பொறுப்பு.

களுத்துறை மாணவியின் மரணம் சுற்றுலாத் துறைக்கும், ஹோட்டல் துறைக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் தொழில்துறையின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்விற்காக மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

ஒழுங்கற்ற மற்றும் பொறுப்பற்ற விதத்தில் செயல்படும் ஹோட்டல்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அதற்கு தமது சங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்.” என துணைத் தலைவர் வல்கே மேலும் கூறியுள்ளார்.