விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழீழவிடுதலைப்புலிகள்தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்காதெரிவித்துள்ளது.
அமெரிக்கா நேற்று வெளியிட்ட பயங்கரவாதம்குறித்த 2021ம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 இல்இலங்கை அரசாங்கத்தால்இராணுவரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின்சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்கின்றதுஎன அமெரிக்கா தெரிவித்துள்ளது.