மன்னாரில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவு

மன்னாரில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நிறைவு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு கட்சிகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன் இலங்கை தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய’ ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சி உறுப்பினர்களும்; வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர.
மன்னார் நகரசபைக்கு 10 கட்சிகள்,1 சுயேட்சைக் குழு உள்ளடங்களாக 11 பேரும், மன்னார் பிரதேச சபைக்கு 8 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 9 பேரும்,நானாட்டான் பிரதேச சபைக்கு 12 கட்சிகளும்,மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும்,முசலி பிரதேச சபைக்கு 12 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 13 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.