விஸ்வமடு வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கடை அடைப்பும் போராட்டம்

விஸ்வமடு வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய கடை அடைப்பும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 14 ஆம் திகதி விசுவமடு பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான கும்பல் ஒன்று வர்த்தக நிலையத்தை சேதமாக்கிய சம்வத்தை;து கண்டிக்கும் வகையிலும் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும் போதைப்பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனும் தொணிப் பொருளில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இப் போராட்டத்தில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.
பள்ளிமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, வீதிவன்முறைகள் விரும்பத்தக்கது அல்ல, போதைப்பொருள் அற்ற இளைஞர் சமுதாயத்தினை உருவாக்குவேம் என’ வாசங்கங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய போராட்டக்காரர்கள் ஜனாதிபதி பொலிஸ் தினைக்களம், சிவில் சமூகத்தினருக்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.


இதேவேளை, தமது பகுதியில் மக்கள் நிம்மதியான தூக்கத்தை தொலைத்து பல நாட்களான நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்பதால் ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.