பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் முன்னாள் மனைவியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்ததை தொடர்ந்து, தற்போது நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .
விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் முன்னதாகஇ காதலிக்கு ஹிருத்திக் மும்பை கடற்கரையை ஒட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது.
எனினும், அதனை மறுக்கும் ஹிருத்திக் ரோஷன் ‘இது உண்மையில்லை. தவறான தகவல். இதனைப் பகிரவேண்டாம்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.