இந்திய நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளையும் தரமற்றவை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சோ்ந்த மேரியன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அம்ப்ரோனால், டோக்-1 மேக்ஸ் ஆகிய இருமல் மருந்துகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மேரியன் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை முடக்கி, இந்திய மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட 2 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைத்து, உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, மனநிலை பிவு, கடுமையான சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்திஇ உயிரிழப்புக்கு வழிவகுக்கக் கூடியவை. இந்த மருந்துகள், வேறு நாடுகளிலும் சந்தை அனுமதியை பெற்றிருக்கக் கூடும் அல்லது அங்கீகாரமற்ற சந்தைகள் வாயிலாக விநியோகிக்கப்பட்டிருக்கலாம். தரம்குறைந்த 2 மருந்துகளும் பாதுகாப்பற்றவை என்பதால், அவற்றை பயன்படுத்துவது குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்குவது தீவிர பாதிப்பையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்தக் கூடும்’ என்று தனது அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அண்மையில் குற்றம்சாட்டியது. அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் ஏற்க இயலாத அளவில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.