ஒரே இரத்த பந்தம் கொண்ட அண்ணன் தங்கை காதலித்து திருமணம்

அமெரிக்காவை சேர்ந்த தம்பதி ஒருவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் உண்மையில் அண்ணன் தங்கை என தெரியவந்துள்ளது.

குறித்த இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இருவரும் இரத்த சொந்தம் கொண்டவர்கள் எனவும் அண்ணன் தங்கை எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அப்பெண் கூறுகையில் நானும் அவரும் காதலிக்க தொடங்கிய போது எங்களுக்கு ஒரே குடும்ப பெயர் இருந்தது. நாங்கள் உறவினர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது, ஆனால், இருவரும் உறவினர்கள் இல்லை என உறுதியாக நம்பி மண வாழ்வில் இணைந்தோம்.

ஆனால் தற்போது இருவருக்கும் தந்தை ஒருவரே என தெரியவந்துள்ளது என குறிப்பிட்டார்.