அமெரிக்காவின் பிரபல்ய இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லியின் மகள் லிசா மேரி பிரெஸ்லி மரணம்

அமெரிக்காவின் இசைக்கலைஞரும் ராக் ‘என்’ ரோல் லெஜண்ட் எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி பிரெஸ்லி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 54 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரடைப்பு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.