பிலிப்பைன்ஸில் பெரிய வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது
உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 தொன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.
பிலிப்பைன்ஸில் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ 11,395.09) என்ற விலையில் விற்படுகிறது. இது அந்நாட்டில் விற்கப்படும் மாட்டிறைச்சி மற்று பன்றி இறைச்சியை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.