ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பிரதான 05 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வதற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று (13) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்று (13) தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.

ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணியின் பெயர், சின்னம் என்பன தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருடன் 05 கட்சியினரும் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.