கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னதாக கூடி ஆராய்ந்திருந்தது.

இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஏனைய பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.