நிறுவனங்களின் நிதி ஊடாக வரி செலுத்துவதை தடுக்க தீர்மானம்

அரச மற்றும் அரசு சார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஊதிய வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  நிதியமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அளவைத் தாண்டி வருமானம் ஈட்டும் அரச மற்றும் அரசு சார் நிறுவனங்களின் ஊழியர்களுக்காக வரி அறிமுகப்படுத்த ப்பட்டதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், நிறுவனங்களின் நிதி வரி செலுத்துவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இதன் மூலம் அரச மற்றும் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு நிறுவனங்களின் நிதியின் ஊடாக வரி செலுத்துவதை தடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.