‘பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது’ தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தற்போதைய சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்வது  தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்குமிடையில் நேற்று முற்பகல் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் தொடர்ந்தும் பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

எனினும் எத்தகைய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டாலும் பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் வேண்டுகோள் விடுக்க வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் 500% மாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் பஸ் கட்டணத்தை குறைப்பது என்பது முடியாத காரியம். அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தினால் அதுதொடர்பில் எமக்கு பிரச்சினை கிடையாது. எனினும் தனியார் பஸ் தொழிற்றுறை மற்றும் ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கி பஸ் கட்டணத்தை குறைக்குமாறு கேட்க வேண்டாம். எந்தவகையிலும் தற்போது பஸ் கட்டணங்களை குறைப்பதற்கான சாத்தியம் கிடையாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிறியன்ஜித் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எந்தவகையிலும் தற்போது பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்