தேர்தல்கள் ஆணைக்குழு – தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே எதிர்வரும் புதன்கிழமை (11) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்கள், தேர்தல் இடம்பெறும் விதம் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.