முன்னணி நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்துவிட்டதாகவும், விஜயின் அடுத்த பார்ட்னர் கீர்த்தி சுரேஷ் என்று விக்கிபீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன் விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் விக்கிபீடியா பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவிற்கும், ப்ரியா அட்லி வளைகாப்பிற்கும் நடிகர் விஜய் தனியாக கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
எனினும், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் விவாகரத்து செய்தி சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், தற்போது விஜய் விக்கிபீடியா பக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் பார்ட்னர் என்ற இடத்தில் இருந்த கீர்த்தி சுரேஷ் பெயர் அகற்றப்பட்டுள்ளதுடன்இ நடிகர் விஜய் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் என்றும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.