சந்திரமுகி-2ஆம் பாகத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ராணவத்-வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

சந்திரமுகி-2ஆம் பாகத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ராணவத் நடிக்கவுள்ளதாக பட தாயரிப்பு நிறுவனமான
லைகா தற்போது உத்தியோக பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குவதுடன் வடிவேலு உட்பட பல நடிகர்கள் சந்திரமுகி -2ஆம் பாகத்தில் நடித்து வருகின்றனர். தற்போது கங்கனா ராவத்தும் இணைந்துள்ளமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி மாபெரும் வெற்றிப்படமாக
உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.