தற்போது நடைபெற்ற வரும் lpl மூன்றாவது போட்டியில் கலக்கிவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த
வியாஸ்காந்தை பற்றி இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும்,இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து
வீச்சாளருமன சமிந்தவாஸ்பெருமையாக கூறியுள்ள செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.
வியாஸ்காந் பற்றி சமிந்தவாஸ் கூறியதாவது,
வியாஸ்காந்தை 2018 யில் தான் முதலில் சந்தித்தேன்அவர் 2020 முதல் t20 போட்டியில் பங்குபற்றியதுடன்
சிறப்பாக விளையாடி வருகின்றார்.இருப்பினும் இதுவரை 2 முதற்தர போட்டிகளில்தான் பங்குபற்றி விளையாடியுள்ளார்
அவரை சிறந்த ஒரு கழகத்தில் சேர்த்து தயார்படுத்தினால் அவர் இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரிய பங்களிப்பை வழங்குவார் என்றும் பயமில்லாமல் பந்து வீசுவதுடன் அழுத்தமான நேரங்களில் எப்படி சிறப்பாக பந்து வீச வேண்டுமென தெரிந்து வைத்துள்ளார் என சமிந்தவாஸ் பெருமை பட கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று மூன்றாவது போட்டியில் வியஸ்காந் 2 போட்டிகளில் பங்கேற்று
5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்
வரிசையில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.