படகு கவிழ்ந்து விபத்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் -பெரும் பரபரப்பு

இன்று சூரியவௌ மஹாவெலிகடஆர வாவியில் படகு சவாரியின் போது படகு கவிழ்ந்ததில்ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

18, 17 மற்றும் 10 வயதுடைய சிறு மிகளேஇவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்ததாகவும், படகில் பயணம் செய்த குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால்
மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்டவர்களில்
8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துக்குள்ளானவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் உறவினர் நிகழ்வு ஒன்றிற்காக இந்த பகுதிக்கு வந்தாகவும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் வாவியின் நடுவே படகு கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.