கனடாவின் ஒன்ராறியோ மாநகர, நகர,உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்காக நடைபெற்ற
தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இவ் தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் வெற்றிபெற்றவர்களில்
இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
ஸ்காபரோ வடக்கு தொகுதியில் கல்விச் சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம் வெற்றி பெற்றதுடன் ஸ்காபரோரூச் பார்க் தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும்
போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜவும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ஸ்காபரோ மத்தி தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண்
மற்றும் மார்கம் நகரில் வோட் – 7 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா
நாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் வெற்றிபெற்ற நான்கு தமிழர்களுக்கும் தற்போது வாழ்த்துக்கள்
குவிந்த வண்ணமுள்ளன.