கிணற்றிற்குள் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு- யாழில் பெரும் சோகம்

யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலியில் கிணற்றில் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழந்த
சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உபாய கதிர்காமம் , புலோலி பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் விழுந்து 24 வயதுடைய இரு
இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்த
போது இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் விழுந்ததுடன் அவரை காப்பாற்ற மற்றொரு
இளைஞர் கிணற்றுக்குள் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்
விசாரணை முன்னெடுத்துள்ளனர்.